Wednesday, September 19, 2012

விடை தெரியா கேள்விகள்.


கடவுளே எதற்கு இந்த உலகத்தை படைத்தாய், அனைத்து உயிர்களும் ஒன்றுதான் என்றால், அனைத்து உயிர்களிலும் நீ இருக்கிறாயென்றால் ஏன் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நிலையிருக்கிறது, ராமனும் நீயே, ரகுமானும் நீயே, ஆனால் ஒருமுறை ராமன் கை ஓங்கியிருக்கிறது, மறுமுறை ரகுமான் கை ஓங்கியிருக்கிறது, இருவரை சுற்றியிருக்கும் உயிர்கள் பலி ஆவதற்கும் நீதானே காரணம், அப்படியென்றால் இந்த உலகம் உனக்கு ஒரு விளையாட்டுப் பொருளாக இருக்கிறது போல, சரி, உன்னுடைய விளையாட்டு பொம்மைகளுக்கு உயிர் கொடுக்க சொல்லி உனக்கு யார் உத்தரவிட்டது, இன்பம், துன்பம், பகல் இருள், அறிவு, மனது, பகை, நட்பு, அன்பு, துவேஷம் ஆகியவற்றை எதனால் இந்த உடல்களுக்குள் வைத்தாய், இதுவரை, கடவுளை சிறிதாகிலும் அறிந்தவர் என்று இந்த சமுதாயத்தால் ஏற்றுக் கொண்டவர்கள் சொல்கிறார்கள் தொலைகாட்சியில் தோன்றி, வேதத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமாம், வேதத்தை கேள்வி கேட்கும் உரிமை மனிதர்களுக்கு இல்லையாம், சரி என்னுள் இருக்கும் கடவுள் இந்த கேள்வி கேட்பதாக எடுத்துக் கொண்டாவது பதில் சொல்லேன், ஏன் இந்த உலகம் என்னும் படைப்பு. அனைத்து உயிர்களிலும் நீதான் இருக்கிறாய் என்றால், ஏன் இந்த ஏற்ற தாழ்வு, பல முறை நினைத்ததுண்டு, உன்னை கண்டுபிடிக்க இந்த அரசாங்கங்கள் செய்யும் செலவை, எல்லா மனிதர்களுக்கும் சமமான வாழ்வை அளிக்க செலவு செய்தால், எல்லோரும் சமமான பின்பு, எல்லோரும் ஒரே நிலையில் இருந்து ஒரே குரலிம் உன்னிடம் வேண்டினால் ஒரு வேளை நீ காட்சிதருவாய் என்று, ஆனால் அந்த அரசாங்க அதிகாரிகளும் நீதானே, உனக்கு தெரியாதா, பின்பு ஏன் இப்படி வைத்திருக்கிறாய், ஒரு வேலை இப்படி இருந்தால் தான் உனது விளையாட்டு சுவாரசியமாக இருக்குமோ, நாங்களெல்லாம் ஒன்றாக சேர்ந்துவிட்டால் உனது விளையாட்டு முடிவுக்கு வந்துவிடும் என்று அஞ்சுகிறாயோ, கடவுளுக்கு அச்சம் வருமோ? இல்லையென்றால், எங்கள் கண்களுக்கு, ஒரு பந்து எவ்வளவு சிறிதாக இருக்கிறதோ, அதைப் போல் சிறிதாக உனக்கு காட்சியளிக்கும் இந்த உலகத்தையும், உலகத்தில் உள்ள மனிதர்களையும் சமமாகதான் வையேன் பார்ப்போம்.

 தெரியும் நீ செய்ய மாட்டாய், நீ மனிதர்களுக்குள் இல்லை, அது ஒரு மூட நம்பிக்கை, அப்படி யென்றால் நீ யார், எதற்கு இந்த உலகம், ஏன் உயிர் என்னும் படைப்பு, ஏன் அதில் பல வகைகள், ஏன் எல்லா உயிர்க்கும் மனது என்று ஒன்று இருக்கிறது, அதில் ஆசை என்று ஒன்று இருக்கிறது, அறிவை எதனால் படைத்தாய், அதில் மனிதர்களுக்கு மட்டும் ஏன் ஆறாம் அறிவு வேறு, உலகம் தோன்றி இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதற்கெல்லாம் விடை இன்னும் ஏன் கிடைக்கவில்லை, ஏனேன்றால் உன்னால் மனிதர்களாக படைக்கப் பட்ட உயிர்களால் தான் உலகத்தை அழகாக்க முடியும், ஆனால் நாங்கள் இன்னும் பண்பட வில்லை, எங்கள் அறிவுக்கு இந்த உலகத்தின் படைப்பிற்கான காரணம் புரிபட வில்லை, பல்வேறு நாடுகளாக, பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆட்சி செய்யும் மனிதர்களுக்கு சொல்லேன், எல்லா உயிரும் ஒன்றுதான், பல ஆண்டுகளுக்கு பிறகு தனி தனி நாடுகள் என்று இருக்காது, பல பல சாதிகள் இருக்காது, ஏசுவா, அல்லாவா, கிருஷ்னனா, யார் கடவுள் என்னும் குழப்பம் இருக்காது, குலோதுங்க சோழனா, ஹிட்லரா, புஷ்ஷா, ஒபாமாவா, கலைஞரா, ஜெயலலிதாவா, யார் ஆட்சியாளர் என்று தெரியாது, தெரிய போவதெல்லாம், அன்பு ஒன்றே, அந்த நாள் வரும் போது, மனிதர்களுள் இருக்கும் வேற்றுமை மட்டும் ஒழிய போவதில்லை, எங்களின் துக்கமும்தான், அந்த நாட்களை நோக்கி உலகம் போய்க் கொண்டுயிருக்கும் நிலையில், அடித்துக் கொள்ளாமல் எல்லோரும் வாழ்வதற்கு வழி செய்ய ஆட்சியாளர்களுக்கு எடுத்து சொல்லி வழிக் காட்டேன்.
சமீபத்தில் ஒரு புத்தகத்தின் தலைப்பை படித்தேன், அந்த புத்தகம் படிக்க இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும் அந்த மனிதனின் புரிதலை எண்ணி அடிக்கடி வியந்து கொண்டுயிருக்கிறேன், அந்த தலைப்பு “ஆட தெரியாத கடவுள்”. ஏன் பாஸ் உனக்கு இந்த கெட்டப் பெயர், ஒழுங்கா சீக்கிரம் நல்லது செய்யர வழியைப் பார்.

Saturday, April 17, 2010

இலவசங்கள் நல்லதா?

தமிழகத்தில் நமக்கு கொடுக்கப்படும் இலவசங்கள் நம்மை எந்த பாதையில் அழைத்து செல்கிறது?

“பசியில் தவிக்கும் ஒருவனுடன், நம்மிடம் இருக்கும் உணவை பகிர்ந்துக் கொள்ளுதல் தவறில்லை, ஆனால் அடுத்த வேலை உணவைப் பற்றி சிந்திக்காமல் இருக்கும் ஒருவனுக்கு மீண்டும் மீண்டும் உணவிடுவதில் என்ன பயன் உண்டாகிவிட போகிறது, அரசு இலவசங்களை அளிப்பதை விட விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நல்லது என்பது என் நினைப்பு.”